News Update :
Home » » சிரியாவில் இராணுவ ரீதியில் தீர்வு கான அமெரிக்கா முயற்சி

சிரியாவில் இராணுவ ரீதியில் தீர்வு கான அமெரிக்கா முயற்சி

சிரியா பிரச்சினைகள் தொடர்ப்பில், அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அரசியல் ரீதியில் தீர்வு காண்பது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா அப்பிரச்சினைகளுக்கு தற்போது இராணுவ ரீதியில் தீர்வு காண்பதற்கு ஆலோசித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் நேரடியாக வான் தாக்குதல்கள் நடாத்துதல், போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்குதல் உள்ளிட்ட இராணுவ தீர்வுகளை மேற்கொள்ள ஒபாமா ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ் நிலையில், அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. (ம|ஸ)
Share this article :

0 comments:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Design Blog - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template