தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வன் ஆதில் பாக்கிர் மாக்காரின் ஜனாஸா இன்று (15) இரவு 9.00 மணிக்கு லண்டனிலிருந்து இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் இவரது ஜனாஸா கொழும்பு, இல. 34 இல் உள்ள புலஸ் குறுக்குத் தெருவில் அவரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
ஜனாஸா நல்லடக்கம் நாளை (16) மாலை 5 மணிக்கு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறவுள்ளது.
ஆதில் பாக்கிர் மாக்கார் முன்னர், தேசிய இளைஞர் சேவை சங்கத்தின் தலைவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


test
ReplyDelete