Saturday, October 15, 2016

ஜனாதிபதி, பிரதமர் இருவரும் இன்று நாட்டில் இல்லை

பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) இந்தியா பயணமாகிறார்.

8 வது தடவையாக நடைபெறும் இந்த BRICS மாநாட்டின் தலைமை பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

ஒக்டோபர் மாதம் 15 – 16 திகதிகளில் இம்மாநாடு இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது.

இந்தியா. சீனாஇ ரஷ்யாஇ பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய BIMSTEC நாடுகளும் உட்பட ஆப்கானிஸ்தான் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் விளக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பது இலங்கைக்கு அதிகம் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி எஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு பெல்ஜியம் பயணமானார்.

பிரசெல்ஸ்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் இது தொடர்பாக தாம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக ஏற்றுமதி அபிவிருத்தி அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் சம காலத்திலேயே இந்த ஜி எஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டது. என்றாலும் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகை மனித உரிமை மீறல்கள் காரணங்களுக்காக 2010ஆம் ஆண்டு மீளப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

No comments:

Post a Comment