Saturday, October 15, 2016

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் உதயம்

தேசிய அரசாங்கத்தின் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்தும் நோக்கில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சகல இனத்தையும், மதங்களையும் சேர்ந்த இலங்கைப் பிரசைகள் சகலருக்குமிடையில்; நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்பி, நாட்டில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என குறித்த அலுவலகம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இச் செயற்பாட்டில், நீண்ட நாளைய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுவும் மிகப் பிரதான நோக்கமாகும்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும் இணைந்து நல்லிணக்கத்திற்கான பெண்களின் செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்கவும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும் கூடிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினைத் தயாரித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள 1500 பெண்களை இனம்கண்டு, அவர்களுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அவை சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இரண்டாம் கட்டமாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து கிடைக்கப்பெறும் ஆவணங்களை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பித்து விண்ணப்பதாரிகளின் பங்களிப்போடு அவற்றைப் பூரணப்படுத்தி அதன்மூலமாக அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழி சமைத்துக் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சித் திட்டமானது 2016 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி கரைச்சி பிரதேச செயலாளர் அலுவலகத்திலும், 14ஆம் திகதி பூநகரி பிரதேச செயலாளர் அலுவலகத்திலும், 20ஆம் திகதி கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸ)

No comments:

Post a Comment