News Update :
Home » » மாமனிதரை கவனித்த மகனுக்கு கிடைத்த மகத்தான வெகுமதி!

மாமனிதரை கவனித்த மகனுக்கு கிடைத்த மகத்தான வெகுமதி!

மர்ஹூம் ஷெய்ஹுல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிவிடை செய்த, வெல்லம்பிட்டியை சேர்ந்த அல்ஹாபிழ் மௌலவி நாசர் முஹம்மட் றிபாஸை கௌரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனினால் இலவசமாக உம்றா பயணத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

இதற்கான ஆவணங்களை ஹிரா பௌண்டேஷன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹிரா பௌண்டேஷன் செயலாளர் மும்தாஸ் மதனி மற்றும் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்படும் விடுமுறைகளைக்கூட பொருட்படுத்தாது மர்ஹூம் ஷெய்ஹுல் பலாஹ் அவர்களுக்கான சகல பணிவிடைகளையும் செய்து கவனித்தமைக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே இறையோனின் புனித இல்லமான கஃபாவை தரிசித்து உம்றா செய்வதற்கான பாக்கியம் ஹிறா பெளண்டேஷனால் ஹாபிழ் றிபாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உம்றா கடமைக்காக இன்னும் சில தினங்களில் அல் ஹாபிழ் நாசர் முஹம்மட் றிபாஸ் மக்கா நகருக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

– ஆர். ஹஸன் –

Share this article :

0 comments:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Design Blog - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template